ஈரோட்டில் மண்பாண்ட தொழில்நுட்ப கல்லூரி அமைக்க வேண்டும்; குலாலர் சங்க கூட்டத்தில் தீர்மானம்


ஈரோட்டில் மண்பாண்ட தொழில்நுட்ப கல்லூரி அமைக்க வேண்டும்; குலாலர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x

ஈரோட்டில் மண்பாண்ட தொழில்நுட்ப கல்லூரி அமைக்க வேண்டும்; குலாலர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

ஈரோடு

தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம், ஈரோடு மாவட்ட குலாலர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் பவானியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட குலாலர் சங்க கல்வி பரிசளிப்பு அறக்கட்டளை தலைவர் எஸ்.பி.நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வி.ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் வி.டி.யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் எஸ்.கனகராஜ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் சேம.நாராயணன் கலந்துகொண்டு, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையை வழங்கி பேசினார். கூட்டத்தில், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக கூடுதலாக ரூ.5 ஆயிரம் வழங்கிய தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, விலையில்லா வேட்டி-சேலை வழங்குவதைபோல ஆண்டுதோறும் மண்பானையும், மண் அடுப்பும் வழங்க வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தும் வகையிலும் மண்பாண்ட தொழில்நுட்ப கல்லூரியை ஈரோட்டில் அமைக்க வேண்டும். தமிழ்நாடு மண்பாண்ட நல வாரியத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை மீண்டும் நியமிக்க வேண்டும். குலாலர் சமுதாயத்துக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மாவீரர் சாலிவாகனனுக்கு மணிமண்டபம், உருவச்சிலை அமைக்க வேண்டும். தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு மின்சக்கரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பவானி நகர தி.மு.க. செயலாளர் நாகராஜன், சங்க மாநில பொதுச்செயலாளர் பாவலர் கணபதி, பொருளாளர் மகேஷ் கண்ணன், துணை பொதுச்செயலாளர் அன்பரசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story