கல்லூரி மாணவர் போக்சோவில் கைது
சிறுமியை கடத்தி திருமணம் செய்ததாக கல்லூரி மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சிறுமியை கடத்தி திருமணம் செய்ததாக கல்லூரி மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சிறுமிக்கு திருமணம்
கோவையை சேர்ந்த 16 வயது சிறுமி, 17 வயது கல்லூரி மாணவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த கல்லூரி மாணவர், சிறுமியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த சிறுமி பொள்ளாச்சி மகளிர் போலீஸ் நிலை யத்திற்கு வந்து, தனது கணவரை எச்சரித்து அனுப்புமாறு கூறினார். விசாரணையில் சிறுமியை, கல்லூரி மாணவர் திருமணம் செய்தது தெரியவந்தது.
மாணவர் கைது
இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியை திருமணம் செய்ததாக 17 வயது கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை கோவையில் உள்ள கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். சிறுமியை மீட்டு பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்தனர். மேலும் சிறுவனின் பெற்றோர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:-
பெற்றோரிடம் விசாரணை
கோவையை சேர்ந்த சிறுமி பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் போது கல்லூரி மாணவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறி உள்ளது.
இதை அறிந்த பெற்றோர், அந்த சிறுமியை கோவைக்கு அழைத்து சென்றனர். மாணவர் கல்லூரியில் படித்து வந்தார். ஆனாலும் அவர்கள் செல்போன் மூலம் காதலை வளர்த்து வந்தனர்.
இதற்கிடையே கல்லூரி மாணவர் தனது வீட்டில் வைத்து அந்த சிறுமிக்கு திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
16 வயது சிறுமியை திருமணம் செய்ததால் அந்த மாணவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சிறுமியை திருமணம் செய்ய உடந்தை யாக இருந்ததாக சிறுவனின் பெற்றோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.