மின் கோபுரத்தில் தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை


மின் கோபுரத்தில் தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை
x

தூசி அருகே மின் கோபுரத்தில் தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

தூசி

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே அரசன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் இன்பராஜா. இவரது மகன் டெல்லிபாபு (வயது 18), செய்யாறு அரசு கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இவருக்கும் அதே கல்லூரியில் படிக்கும் முதலாமாண்டு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென மாயமானார்கள்.

கடந்த 21-ந் தேதி பின்னந்தாங்கல் கிராமத்தில் உள்ள மாணவி வீட்டிற்கு இருவரும் வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை மாணவியின் வீட்டு அருகில் உள்ள மின்வாரிய கோபுரத்தில் டெல்லிபாபு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த தூசி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story