திருத்தணியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை


திருத்தணியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை
x

திருத்தணியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் அவர் எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

சென்னை

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம் கிருஷ்ணசமுத்திரம் பள்ளர் தெருவில் வசிப்பவர் சிவகுமார். இவருடைய மகள் கமலி (வயது 19).

இவர் திருத்தணி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு சில மாதங்களாகவே வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கமலி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை கமலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

போலீசார் விசாரணை நடத்தியதில் தற்கொலை செய்து கொண்ட மாணவி கமலி எழுதிய கடிதம் கிடைத்தது. அதில் எனது சாவுக்கு யாரும் காரணம் கிடையாது. எனக்கு அப்பா, அம்மாவை ரொம்ப பிடிக்கும். அம்மா உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன், என் இறப்பு பற்றி தவறாக யாரும் சித்தரிக்க வேண்டாம் என உருக்கமாக எழுதி இருந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story