கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை
கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குடி அருகே தோப்புக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி அஞ்சலைதேவி. இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். இதில் 4-வது மகள் அகல்யா (வயது 19). இவர் ஆலங்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர் வீட்டிற்கு தெரியாமல் செல்ேபான் வைத்திருந்தார். இதை பார்த்த அவரது தாயார் அகல்யாவிடம் செல்போனை குறித்து கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்த அகல்யா அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் கயிறு கட்டி இறங்கி அகல்யா உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதையடுத்து அங்கு வந்த செம்பட்டிவிடுதி போலீசார் அகல்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.