கல்லூரி மாணவர் சாவு


கல்லூரி மாணவர் சாவு
x
தினத்தந்தி 19 Jun 2022 9:39 PM IST (Updated: 19 Jun 2022 9:55 PM IST)
t-max-icont-min-icon

பழனியில் விபத்தில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல்

பழனி பாளையம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 21). இவர், பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 17-ந்தேதி இவர், பழனி பஸ்நிலையத்தில் இருந்து அடிவாரம் நோக்கி மொபட்டில் சென்றபோது, எதிரே வந்த வேன் மீது இவரின் மொபட் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மனோஜ்குமார் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பழனி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story