விஷம் குடித்த கல்லூரி மாணவி சாவு


விஷம் குடித்த கல்லூரி மாணவி சாவு
x

விபத்தில் அண்ணன் பலியான செய்தியை கேட்டு விஷம் குடித்த கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார்.

புதுக்கோட்டை

அறந்தாங்கி:

அண்ணன் இறந்த செய்தி

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே நாகுடி கம்பசேரி பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 32), ராஜகுரு (23). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, அரசு கார் மோதியதில் ராமநாதன், ராஜகுரு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ராமநாதன் சித்தப்பா மகள் ராக்கம்மாள் (21).

இவர் அறந்தாங்கி அருகே உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று ராமநாதன் விபத்தில் இறந்த செய்தியை கேட்ட ராக்கம்மாள் மனமுடைந்த நிலையில் அழுது கொண்டிருந்தார்.

மாணவி சாவு

இதையடுத்து அண்ணன் இறந்து விட்டார் என்றதை ஏற்கமுடியாமல் ராக்கம்மாள் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சுப்பிரமணியுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ராக்கம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story