பஸ்சில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி படுகாயம்


பஸ்சில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி படுகாயம்
x
தினத்தந்தி 28 May 2023 12:15 AM IST (Updated: 28 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி படுகாயம் டிரைவர் திடீரென பிரேக் பிடித்ததால் விபத்து

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனத்தை அடுத்த கொடியம் கிராமத்தை சேர்ந்தவர் தனக்கோட்டி மகள் திவ்யா(வயது 20). இவர் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் திவ்யா நேற்று காலை அரசு பஸ்சில் கல்லூரிக்கு சென்று கெண்டிருந்தார். அப்போது வழியில் டிரைவர் திடீரென பிரேக் பிடித்ததால் நிலை தடுமாறிய அவர் பஸ்சின் முன்பக்க படிக்கட்டு வழியாக கீழே விழுந்தார். இதை கவனிக்காமல் டிரைவர் பஸ்சை இயக்கினார். இதில் திவ்யாவின் இடது காலில் பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் படுகாயம் அடைந்த அவர் வலி தாங்க முடியால் அலறி துடித்தார். இதையடுத்து டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பின்னர் படுகாயம் அடைந்த திவ்யாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சோ்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story