கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை
கோவை அருகே கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
சரவணம்பட்டி
கோவை அருகே கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
காதல்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சாலையூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் விக்னேஷ்(வயது 22). இவர் கோவையில் தங்கியிருந்து, கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். மேலும் கோவை ெரயில் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் பகுதி நேர தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் விக்னேசுக்கும், கோவையில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. தொடர்ந்து விக்னேஷ், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை தனது சொந்த ஊருக்கு கடத்தி சென்றார். அங்கு அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
கைது
இதற்கிடையில் அந்த மாணவியின் தந்தை, தனது மகளை காணவில்லை என்று கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த மாணவியை விக்னேஷ் தனது சொந்த ஊருக்கு கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த கோவில்பாளையம் போலீசார், திருத்துறைப்பூண்டி சென்று விக்னேஷை கைது செய்தனர். மேலும் கல்லூரி மாணவியை மீட்டனர்.