பொத்தேரி ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ெரயில் மோதி கல்லூரி மாணவி பலி


பொத்தேரி ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ெரயில் மோதி கல்லூரி மாணவி பலி
x

பொத்தேரி ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி கல்லூரி மாணவி பலியானார்.

செங்கல்பட்டு

கல்லூரி மாணவி

சென்னை தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்தூர் திருவள்ளுவர் 3-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ரகுராமன். இவருடைய மகள் கிருத்திகா(வயது 20). இவர், பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஆப்டோம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். மாணவி கிருத்திகா வழக்கம்போல் கல்லூரி முடிந்து வீடு திரும்ப பொத்தேரி ெரயில் நிலையம் வந்தார். அவர் செல்போனில் பேசியபடியே தண்டவாளத்தை கடந்து, நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி பலி

அப்போது சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம் வழியாக காரைக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், கல்லூரி மாணவி கிருத்திகா மீது மோதியது. இதில் மாணவி கிருத்திகா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதுபற்றி தகவல் அறிந்துவந்த தாம்பரம் ெரயில்வே போலீசார் உயிரிழந்த கிருத்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையடுத்து ெரயில் நிலையங்களில் நடைமேடைகளை பயன்படுத்த வேண்டும். தண்டவாளங்களை ஆபத்தான முறையில் கடக்க கூடாது என தாம்பரம் ெரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன் தலைமையில் பொத்தேரி ெரயில் நிலையத்தில் ெரயில்வே போலீசார் பயணிகள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story