கல்லூரி மாணவர் மாயம்


கல்லூரி மாணவர் மாயம்
x
தினத்தந்தி 13 July 2023 11:02 PM IST (Updated: 15 July 2023 4:00 PM IST)
t-max-icont-min-icon

பனப்பாக்கம் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் மாயமானார்.

ராணிப்பேட்டை

பனப்பாக்கத்தை அடுத்த மேலபுலம் கிராமத்தை சேர்ந்த 19 வயது மாணவர் ஒருவர் மேல்விஷாரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முதல் பருவத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் அவர் சில பாடத்தில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் எப்போதும் செல்போன் பார்த்துக்கொண்டிருந்ததால்தான் தேர்வில் வெற்றிபெறவில்லை என்று அவரது தந்தை கூறி, அவரிடமிருந்து செல்போனை வாங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் மாணவர் கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து நேற்று அவளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சாமிவேல் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story