மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 வாலிபர்கள் படுகாயம்


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 வாலிபர்கள் படுகாயம்
x

அன்னவாசல் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை

திருச்சி வயலூர் பகுதியை சேர்ந்தவர் கவுரிசங்கர் (வயது 22). இவர் திருச்சியில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கவுரி சங்கர் பணம் வசூலுக்காக திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதேபோல் அன்னவாசலை சேர்ந்த அப்துல்பாரி (20) என்பவர் அன்னவாசலில் இருந்து இலுப்பூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அன்னவாசல் அருகே தான்றீஸ்வரம் எனும் இடத்தில் வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 வாலிபர்களையும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story