மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலி
x

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் உயிரிழந்தார்.

திருச்சி

முசிறி:

தொட்டியம் எடத்தெருவை சேர்ந்தவர் வேலு(வயது 40). இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஓமந்தூரில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்றுவிட்டு புலிவலம் தண்டலைப்புத்தூர் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது வடக்கு நல்லியம்பட்டியை சேர்ந்த பொன்னையா (49) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், வேலுவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வேலு நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த வேலுவின் மனைவி கனிமொழி, முசிறி போலீசில் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

1 More update

Next Story