மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பால் வியாபாரி பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பால் வியாபாரி பலி
x

சேத்துப்பட்டு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் பால் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை சேர்ந்தவர் சங்கர் (வயது 53), பால் வியாபாரி. இவர், மோட்டார் சைக்கிளில் சேத்துப்பட்டு அருகே உள்ள கிழக்கு மேடு பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது, இவரது மோட்டார் சைக்கிளும், சேத்துப்பட்டு வ.உ.சி. தெருவை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் சக்திவேல் (25) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.

இதில், சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சக்திவேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story