மோட்டார் சைக்கிள்கள் மோதல்; முதியவர் பலி
மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் முதியவர் பலியானார்.
புதுக்கோட்டை மாவட்டம், பழைய ஆதனக்கோட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). இவர் பெருங்களூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக தஞ்சை-புதுகை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக தளிகை விடுதியை சேர்ந்த சின்னதுரை மகன் பசுபதி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், ஆறுமுகம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் ஆறுமுகம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். பசுபதி மட்டும் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆதனக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.