மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
x

புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி

கன்னியாகுமரி

புதுக்கடை,

தக்கலை அருகே உள்ள வில்லுக்குறி தோப்புவிளாகம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மகன் விக்னேஷ் (வயது29). இவருடைய நண்பர் முன்சிறை முட்டக்குளம் பகுதியை சேர்ந்த அருள்சாமி மகன் அஜித் (23). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று மார்த்தாண்டம்- புதுக்கடை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். முன்சிறை சந்திப்பு அருகே வந்த போது எதிரே ஜிம்மி நிக்சன் (24) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். எதிர்பாராத விதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதின. இதில் 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அஜித் மற்றும் ஜிம்மி நிக்சன் ஆகியோரை அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து புதுக்கடை இன்ஸ்பெக்டர் இசக்கி துரை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

1 More update

Next Story