திங்கள்சந்தை அருகே தாறுமாறாக ஓடிய கார் வாகனங்கள் மீது மோதல்; 2 பேர் காயம்
திங்கள்சந்தை அருகே தாறுமாறாக ஓடிய கார் வாகனங்கள் மீது மோதியதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
கன்னியாகுமரி
திங்கள்சந்தை:
நுள்ளிவிளை அருகே காரங்காடு பகுதியை சேர்ந்தவர் பென்சிகர் (வயது 47). இவர் திங்கள்சந்தை அருகே குளச்சல் சாலையில் பூசாஸ்தான்விளையில் பேட்டரி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை அந்த கடைக்கு ஒருவர் ஆட்டோவை ஓட்டி வந்தார்.பின்னர் அந்த ஆட்டோவில் பேட்டரியை பென்சிகர் பார்த்துக் கொண்டிருந்தார். இந்தநிலையில் அந்த வழியாக கார் ஒன்று தாறுமாறாக ஓடியபடி ஆட்டோ, பென்சிகர், ஆட்டோ டிரைவர் மற்றும் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பென்சிகர், ஆட்டோ டிரைவர் படுகாயம் அடைந்தனர். கார் மோதியதில் மற்ற வாகனங்களும் சேதமடைந்தன. காரை ஓட்டி வந்தவர் போதையில் இருந்திருக்கலாம் என தெரிகிறது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story