பழனியில் நிறம் மாறும் அதிசய ரங்கூன் கிரீப்பர் பூக்கள்

பழனியில் நிறம் மாறும் அதிசய ரங்கூன் கிரீப்பர் பூக்களை பொதுமக்கள் அதிசயத்துடன் பார்த்து செல்கின்றனர்.
திண்டுக்கல்
பழனி சண்முகபுரத்தை சேர்ந்தவர் மகாலிங்கம். அவருடைய மனைவி கவுரி. இவர் தனது வீட்டில் 'ரங்கூன் கிரீப்பர்' என்ற பூச்செடியை வளர்த்து வருகிறார். தற்போது அந்த செடியின் கொடியில் பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. இதில் ஆச்சரியம் என்னவென்றால் மொட்டுகள் வெள்ளை நிறத்திலும், மலரும்போது ரோஸ் நிறமாக மாறி இறுதியில் சிவப்பு என 3 நிறங்கள் மாறுகிறது. இதனை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.
இதுகுறித்து கவுரி கூறுகையில் 'ரங்கூன் கிரீப்பர்' செடியை 2 ஆண்டுகளுக்கு முன்பு செடியாக நட்டு வைத்தேன். நடவு செய்த 9 மாதங்களுக்கு பிறகு பூக்கள் பூக்க தொடங்கியது. 3 மாதத்துக்கு ஒரு முறை பூக்கள் பூத்துக்குலுங்கும். மல்லிகைப்பூவுக்கு ஒத்த வாசனையுடன், பார்ப்பதற்கு அழகுடன் இருப்பதால் பலரும் பார்த்து செல்கின்றனர் என்றார்.
Related Tags :
Next Story