தேவகோட்டை அருகே இரட்டைக்கொலை:கார்த்தி சிதம்பரம் எம்.பி. நேரில் ஆறுதல்


தேவகோட்டை அருகே இரட்டைக்கொலை:கார்த்தி சிதம்பரம் எம்.பி. நேரில் ஆறுதல்
x
தினத்தந்தி 18 Jan 2023 6:45 PM GMT (Updated: 18 Jan 2023 6:46 PM GMT)

தேவகோட்டையில் இரட்டைக்கொலை நடந்த வீட்டிற்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

சிவகங்கை

தேவகோட்டை

தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டையில் சில நாட்களுக்கு முன்பு தாய்-மகள் நகை, பணத்துக்காக கொலை செய்யப்பட்டனர். இந்தநிலையில் இரட்டைக்கொலை நடந்த வீட்டிற்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவர் கொலையுண்ட கனகம் மகன் பாலசுப்பிரமணியனிடம் நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது, இச்சம்பவம் மிகுந்த துயரத்தை அளிக்கிறது. இதுகுறித்து டி.ஜி.பி. துரை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளேன். 5 தினங்களுக்குள் நடவடிக்கை எடுத்துவிடுவோம் என டி.ஐ.ஜி. தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்-அமைச்சரை சந்தித்தும் பேச உள்ளேன். கொலை சம்பவம் நடந்த அன்றே மாங்குடி எம்.எல்.ஏ. முதல்-அமைச்சர் மற்றும் சபாநாயகர், காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் தெரிவித்தார். அவர்களும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்கள். நிச்சயம் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவா் கூறினாா்.

அப்போது மாங்குடி எம்.எல்.ஏ., தேவகோட்டை தி.மு.க. நகர செயலாளர் பாலமுருகன், ஒன்றிய செயலாளர் பூபாலசிங்கம், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் அப்பச்சி சபாபதி, மாவட்ட பொது செயலாளர் பூமிநாதன், தேவகோட்டை நகர் (கிழக்கு) காங்கிரஸ் தலைவர் சஞ்சய், ஒன்றிய கவுன்சிலர் கணேசன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் பெரி.மகேந்திரன், வட்டார காங்கிரஸ் கமிட்டி முத்துமனோகரன் உள்ளிட்ட பலா் இருந்தனர்.


Related Tags :
Next Story