சென்னையில் இருந்து மதுரைக்கு வரவேண்டியவிமானம் திடீர் ரத்து; பயணிகள் அவதி


சென்னையில் இருந்து மதுரைக்கு வரவேண்டியவிமானம் திடீர் ரத்து; பயணிகள் அவதி
x

சென்னையில் இருந்து மதுரைக்கு வரவேண்டிய விமானம் திடீர் ரத்தானதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

மதுரை


சென்னையில் இருந்து புறப்பட்டு, தினமும் பகல் 11.30 மணிக்கு ஒரு விமானம் மதுரை வந்தடையும். மீண்டும் அந்த விமானம் மதுரையில் இருந்து 12.05 மணிக்கு சென்னை புறப்படும். நேற்று அதில் சென்னை செல்ல 90 பேர் முன்பதிவு செய்து காத்திருந்தனர். இந்த நிலையில், மதுரை வர வேண்டிய அந்த விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. விமானம் திடீரென ரத்தானதால் பயணிகள் அந்த விமான நிறுவன ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவசரமாக செல்ல வேண்டிய பயணிகள் கார்கள், வேறு விமானங்கள் மூலமாக சென்னை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. விமானம் திடீரென ரத்தானதால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாயினர்.


Next Story