சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு நினைவு பரிசு


சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு நினைவு பரிசு
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு டி.ஐ.ஜி. நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையை அடுத்த பால்னாங்குப்பம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆயுதப்படை போலீசாருக்கு பெரு விருந்து விழா நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஆயுதப்படை ஆண், பெண் போலீசாரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூலம் அனைத்து போலீசாருக்கும் நினைவு பரிசாக கைக் கடிகாரம் வழங்கப்பட்டது.

டி.ஐ.ஜி. முத்துசாமி மற்றும் வேலூர், திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேஷ் கண்ணன், பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆயுதப்படை போலீசாருக்கு பெருவிருந்து வழங்கி உணவு பரிமாறினார்கள்.


Next Story