மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்


மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்
x

மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது.

மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று நவராத்திரி விழா தொடங்கியது. முதல் நாளான நேற்று கோவில் வளாகத்தில் ஏராளமான கொலு பொம்மைகள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

கோவிலுக்கு வந்த பக்தர்கள் சாமி தரிசனம் முடித்துவிட்டு காட்சிக்கு வைக்கப்பட்ட கொலு பொம்மைகளை தங்களது செல்போன்களில் படம் பிடித்து சென்றனர்.

முதல் நாளில் அம்மன் பச்சைப்பட்டு உடுத்தி மீனாட்சியம்மன் கோலத்தில் காட்சி அளித்தார். பரதநாட்டியம் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நேற்று தொடங்கிய நவராத்திரி விழாவானது அக்டோபர் மாதம் 5-ம் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் அம்மன் ஒவ்வொரு கோலத்தில் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா மணலி சீனிவாசன் செய்திருந்தார்.


Next Story