காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்ய குழு-கலெக்டர் கார்மேகம் தகவல்


காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்ய குழு-கலெக்டர் கார்மேகம் தகவல்
x

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு நடத்த 67 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.

சேலம்

காலை உணவு திட்டம்

ஏற்காடு முண்டகம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். தொடர்ந்து மாணவர்களுக்கு உணவு வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாவட்டத்தில் ஆயிரத்து 418 தொடக்க பள்ளிகளில் படிக்கும் ஒரு லட்சத்து ஆயிரத்து 318 மாணவ, மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர். முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகளை ஆய்வு நடத்த 67 அலுவலர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டு உள்ளன.

ஆய்வு கூட்டம்

தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் சுவையாக உணவு தயார் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்த பிறகுதான் பள்ளி மாணவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளன. இதுதவிர ஒவ்வொரு பள்ளியிலும் அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொள்வார்கள்.

மேலும் ஒவ்வொரு வாரம் புதன்கிழமை தோறும் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்யும் அலுவலர்களுக்கு ஆய்வு கூட்டம் நடத்தப்படும். முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு தனிக்கவனம் செலுத்தப்பட்டு வரப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக காலை உணவு தரமாகவும், சுவையாகவும், குறித்த நேரத்தில் சமைத்து மாணவ, மாணவிகளுக்கு வழங்கிய சமையலர் சோனியாவுக்கு கலெக்டர் கார்மேகம் பாராட்டு தெரிவித்தார்.


Next Story