ஊஞ்சலூர் அருகே பரபரப்பு: அரசு பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்திய மர்மநபர்கள்
ஊஞ்சலூர் அருகே அரசு பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து பொருட்களை மர்மநபர்கள் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டு்ள்ளது.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் அருகே அரசு பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து பொருட்களை மர்மநபர்கள் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டு்ள்ளது.
பொருட்கள் சிதறி கிடந்தன
ஊஞ்சலூர் அருகே வளந்தான்கோட்டையில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. பள்ளிக்கூட தலைமை ஆசிரியராக கலாவதி என்பவர் உள்ளார். 6 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு 1 முதல் 8-ம் வகுப்பு வரை என மொத்தம் 43 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி மாலையில் பள்ளிக்கூடம் முடிந்ததும் வழக்கம்போல் பூட்டிவிட்டு அனைவரும் சென்றுவிட்டனர். அதன்பின்னர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடம் வந்தனர். அதேபோல் ஆசிரியர்களும் பணிக்கு வந்தனர். அப்போது தலைமை ஆசிரியரின் அறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே சிதறியபடி கிடந்தன.
வட்டார கல்வி அலுவலர்
மேலும் அறையின் முன்பு இருந்த தண்ணீர் தொட்டியின் குழாய் முழுவதும் அடித்து உடைக்கப்பட்டு கிடந்தது. அருகில் இருந்த கழிவறை கதவின் பூட்டு்ம் உடைக்கப்பட்டு் திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது சுவர் முழுவதும் பெயிண்டில் ஆபாச வார்த்தைகள் எழுதி வைக்கப்பட்டு் இருந்தது. இதுபற்றி அறிந்ததும் கொடுமுடி வட்டார கல்வி அலுவலர் முருகன் அங்கு சென்று தலைமை ஆசிரியர் அறையை பார்வையிட்டார். அதன்பின்னர் இதுகுறித்து கொடுமுடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
விசாரணை
அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து போலீசில் தலைமை ஆசிரியர் கலாவதி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊஞ்சலூர் அருகே அரசு பள்ளிக்கூடத்தை மர்மநபர்கள் சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.