கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை
மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், இச்சம்பவத்தை தடுக்க தவறியதாக மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், ஆவுடையார்கோவில் கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தாலுகா செயலாளர் முருகேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய அணி தாலுகா செயலாளர் எம்.எஸ்.கலந்தர், விவசாய தொழிலாளர் சங்க தலைவர் வீரையா மற்றும் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story