கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

கூடுதலாக நிவாரணம் வழங்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கரூர்

கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் குளித்த புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் தமிழரசி, இனியா, லாவண்யா, சோபியா ஆகிய 4 மாணவிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து மாணவிகளின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது. இந்தநிலையில் இறந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கக்கோரி நேற்று மாயனூர் பஸ் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story