இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர்

மணிப்பூர் மாநில மக்களை பிளவுபடுத்திய மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை கோரியும் நேற்று கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கரூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் நாட்ராயன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் ரெத்தினம், பொருளாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story