இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும், அதற்கு நடவடிக்கை எடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மேலும் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஞானசேகரன், மாவட்ட செயலாளர் ஜெயராமன், முன்னாள் மாவட்ட செயலாளர் வேணுகோபால் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.


Next Story