இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கர்நாடக அரசு காவிரி நீரை திறந்துவிடக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
திருமருகல் தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், ஒன்றிய தலைவர் மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தமிழகத்திற்கு வழங்கவேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிட வேண்டும். தண்ணீர் இல்லாமல் சாகுபடி அழிந்து இழப்பை அடைந்துள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். குறுவை சாகுபடிக்கான பயிர்க்காப்பீடு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
வேதாரண்யம்
வேதாரண்யம் தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஒன்றிய துணைச் செயலாளர் பாலகுரு ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவகுரு.பாண்டியன் பேசினார். இதில் விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் செங்குட்டுவன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் முருகானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
சாலைமறியல்
அதேபோல் தலைஞாயிறு அருகே உள்ள அருந்தவம்புலம் கடைத்தெருவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் சந்தானகிருஷ்ணன் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த சாலைமறியலால் திருத்துறைப்பூண்டி- நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருக்குவளை
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருக்குவளை கடைத்தெரு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் செல்வம் தலைமையில் கட்சியினர் திருக்குவளையில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து தபால் நிலையம் முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கீழ்வேளூர்
கீழ்வேளூர் தபால் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் காசிநாதன் தலைமை தாங்கினார்.