இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் மு.வீரபாண்டியனை தாக்கிய நபர்களை கண்டித்தும், அவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணை தலைவர் குருவு, மாவட்ட குழு உறுப்பினர் காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாய தொழிலாளர் வட்ட தலைவர் வேல்சாமி, இந்திய தேசிய மாதர் சம்மேளனம் மாவட்ட துணை செயலாளர் சண்முக வடிவு, வார்டு செயலாளர்கள் கோவிந்தன், கிருஷ்ணன், மாரியப்பன், ஏ.ஐ.ஒய்.எப். நகர செயலாளர் பால்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story