இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
x

குடியாத்தத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர்

குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் மூ.வீரபாண்டியன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பிர்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளை மீண்டும் கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட மையத்தின் துரை செல்வம், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட தலைவர் எஸ். காவேரி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

ஒன்றிய துணை செயலாளர் கே.சி.பிரேம்குமார், மாவட்ட குழு உறுப்பினர் கல்பனாசந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மையக்குழு உறுப்பினர் மணி, மாதர் சம்மேளன மாநில குழு உறுப்பினரும், கட்சியின் மாவட்ட செயலாளருமான ஜி.லதா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்ட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story