இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை தாலுகா அலவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய மின்சார திருத்த மசோதா, சொத்து வரி, சமையல் கியாஸ், பெட்ரோல் விலை மற்றும் ெரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட குழு உறுப்பினர் மாரியப்பன் தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர் ஆழ்வார், தாலுகா குழு உறுப்பினர் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் இசக்கித்துரை சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் நகர செயலாளர் சுப்பிரமணியன், தாலுகா குழு உறுப்பினர்கள் சாமி, பழனிச்சாமி, முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் போஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தேன்பொத்தை கிளை செயலாளர் செல்லையா நன்றி கூறினார்.


Next Story