இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Feb 2023 12:15 AM IST (Updated: 14 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தென்காசி

தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச் செயலாளர் சுப்பையா தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கிட்டப்பா, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் மாரியப்பன், பரமசிவன் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்துசாமி, மாவட்ட துணை செயலாளர் கணேசன், ஒன்றிய செயலாளர் சம்சுதீன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story