சுற்றுலா தலத்தை சீரமைக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சுற்றுலா தலத்தை சீரமைக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

சுற்றுலா தலத்தை சீரமைக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை

சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தை சீரமைக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் தர்மராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் செங்கோடன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் மீராமொய்தீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் நீண்ட காலமாக பழுதாகி கிடக்கின்ற இசை நீரூற்று சரி செய்து இயக்க வேண்டும், படகு குழாம் பகுதியில் நீர் நிரப்பி படகு சவாரி செயல்படுத்த வேண்டும். சேதமடைந்து கிடக்கின்ற படகுகளை அப்புறப்படுத்திவிட்டு அதற்கு பதிலாக புதிய படகுகளை இயக்க வேண்டும். பூங்காக்களில் சேதமடைந்துள்ள சிறுவர்கள் விளையாட்டு பொருட்களை சீர்படுத்த வேண்டும். கூடுதலாக விளையாட்டு பொருட்களை சேர்க்க வேண்டும். சுற்றுலா வரும் பயணிகள் அமர்ந்து உணவு உண்பதற்கு உணவு அறை கட்ட வேண்டும். உடைந்து கிடக்கின்ற சிலைகளை சீர்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர். இதில் மாவட்ட பொருளாளர் ஜீவானந்தம், ஒன்றியகுழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், முருகையா, ராமன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story