இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
x

வந்தவாசியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

விலைவாசி உயர்வை கண்டித்தும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க கோரியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வந்தவாசி வட்டார குழு சார்பில் வந்தவாசி தேரடியில் உள்ள அஞ்சல் அலுவலகம் அருகில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

வட்டார செயலாளர் எ.ஆரிப் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இரா.தங்கராஜ், மாவட்ட துணை செயலாளர் எ.ரகமத்துல்லா மற்றும் ஈ.சுப்பிரமணி, ஆர்.நாராயணன், பி.முனுசாமி, பி.பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து அரசு பஸ்சை மறித்து சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேரை வந்தவாசி தெற்கு போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

முன்னதாக வந்தவாசி பழைய பஸ் நிலையம் அருகில் இருந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஊர்வலமாக பஜார் வீதி வழியாக தேரடி சென்றடைந்தனர்.


Related Tags :
Next Story