இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
x

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கரூர்

விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிகரிப்பு, மக்களின் ஒற்றுமையை சீர்குலைகின்ற, இந்தியை திணித்து தமிழை பழிக்கின்ற பா.ஜ.க. ஆட்சியை விட்டு வெளியேறவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் குளித்தலையில் காந்தி சிலையில் இருந்து அக்கட்சியினர் கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து, குளித்தலை தலைமை தபால் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதற்கு குளித்தலை தாலுகா செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 18 பேரை குளித்தலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் குளித்தலையில் உள்ள அறிஞர் அண்ணா சமுதாய மன்றத்தில் அடைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் க.பரமத்தி கடைவீதியில் கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் நடைபெற்றது. இதற்கு க.பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். க.பரமத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் குப்புசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் நாட்ராயன், உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த க.பரமத்தி போலீசார் மறியலில் ஈடுபட்ட 24 பேரை கைது செய்து, அப்பகுதியில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story