இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
x

திருவேங்கடத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

தென்காசி

திருவேங்கடம்:

பெட்ரோல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருவேங்கடம் மெயின் பஜாரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளை பாதிக்கும் மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை முறையாக அமல்படுத்தி 200 நாள் வேலை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

சாலை மறியல் போராட்டத்திற்கு தாலுகா செயலாளர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். தாலுகா துணை செயலாளர்கள் கிருஷ்ணசாமி, ஜான் பவுல்ராஜ், தமிழ்நாடு விவசாய சங்க தாலுகா செயலாளர் ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கணேசன், தமிழ்நாடு விவசாய சங்க தாலுகா தலைவர் இருதய செல்வராஜ், ஏ.ஐ.டி.யு.சி முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் தாலுகா குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story