சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
x

சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

தென்காசி

சிவகிரி:

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யக் கோரியும், சிவகிரி நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பாக சாலை மறியல் போராட்டம் நடந்தது. பஸ்நிலையம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சிங்காரவேலு, மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சண்முக வடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறியல் போராட்டம் நடத்தியதாக 23 பெண்கள் உள்பட மொத்தம் 86 பேரை சிவகிரி போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.


Next Story