மத்திய அரசை கண்டித்துஇந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்திருக்கோவிலூரில் 300 பேர் கைது


மத்திய அரசை கண்டித்துஇந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்திருக்கோவிலூரில் 300 பேர் கைது
x
தினத்தந்தி 12 Sep 2023 6:45 PM GMT (Updated: 12 Sep 2023 6:46 PM GMT)

மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் மூலம் 300 பேர் கைதானார்கள்.

கள்ளக்குறிச்சி


திருக்கோவிலூர்,

மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், விலைவாசி உயர்வுக்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், தொழிலாளர் விரோத நான்கு சட்டங்களை திரும்ப பெற்றிடக் கோரியும், படித்த இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலையை உருவாக்கிடவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை ஆட்சியை விட்டு வெளியேறக் கோரியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தமிழகத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் உள்ள ஒரு வங்கி முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி திருக்கோவிலூர் ஒன்றிய குழு, நகரக்குழு, மாவட்ட குழு சார்பில் நேற்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் கே.இராமசாமி, தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கே. ரவி, நகர செயலாளர் பி.எச்.கிப்ஸ், மாவட்ட குழு உறுப்பினர் என்.வேலு, நகர துணைச் செயலாளர் ஆர்.அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

300 பேர் கைது

போராட்டத்தின் போது அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அவர்களை திருக்கோவிலூா் போலீசார் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதன் மூலம் மொத்தம் 300 பேர் கைது செய்யப்பட்டார்கள். கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். முன்னதாக சாலை மறியல் போராட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் அ.சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் எம் வெங்கடேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கலியபெருமாள், எஸ்.தேவேந்திரன், இரா.கஜேந்திரன், நகர குழு உறுப்பினர் பி.எச். பஷீர்அகமது மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story