சமாதான கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வெளிநடப்பு


சமாதான கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வெளிநடப்பு
x

சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வெளிநடப்பு செய்தனர்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே அரும்பராம்பட்டு கிராமத்தில் வீடு இல்லாத ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், அரசு புறம்போக்கு தரிசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கோரி வருகிற 10-ந்தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக சமாதான கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு தாசில்தார் சரவணன் தலைமை தாங்கினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ராமசாமி, மாவட்ட துணை செயலாளர் சுப்பிரமணி மற்றும் வீட்டு மனை கோரிய பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த சமாதான கூட்டத்தில் ஆக்கிரமிப்பு செய்த நபர்களையும் அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டத்தில் முடிவு ஏதும் எடுக்காமல் தோல்வியில் முடிவடைந்தது.


Next Story