சமுதாய சுகாதார செவிலியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுகோள்


சமுதாய சுகாதார செவிலியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுகோள்
x

சமுதாய சுகாதார செவிலியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சுகாதார செவிலியர் சங்கம் மற்றும் செவிலியர் கூட்டமைப்பு சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் மீனாட்சி தலைமை தாங்கினார். முன்னதாக மாநில துணை தலைவர் வசந்தா வரவேற்று பேசினார். கூட்டத்தில் கிராமப் பகுதி சமுதாய சுகாதார செவிலியர் காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும். பணி விதியினை திருத்தம் செய்ய வேண்டும். கொரோனா தடுப்பூசி பணியை ஞாயிற்றுக்கிழமை நடத்துவதை மாற்றி வேலை நாட்களில் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

அவசர கால பணிகள் தவிர மற்ற நேரங்களில் 8 மணி நேரம் மட்டுமே பணி செய்ய உத்தரவிட வேண்டும். கோவிட் 19 ஊக்கத்தொகையை விடுபட்ட துணை கிராம பகுதி சுகாதார செவிலியர்களுக்கு உடனே வழங்க வேண்டும். சுகாதார துறை அறிக்கைகளை பதிவேற்றம் செய்ய டேட்டா கார்டு வழங்க வேண்டும். 7-வது ஊதிய குழுவின் 21 மாத நிலுவை தொகையினை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் செயல் தலைவர் கோமதி, மாநில தலைவர் மீனாட்சி, பொருளாளர் காயத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் எஸ்தர் ராஜகுமாரி நன்றி கூறினார்.


Next Story