சென்னை புறநகர் ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம்; குடிபோதை ஆசாமிக்கு தர்ம அடி


சென்னை புறநகர் ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம்; குடிபோதை ஆசாமிக்கு தர்ம அடி
x

Image Courtesy:  Indiatoday

சென்னை புறநகர் ரெயிலில் குடிபோதையில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர்.



சென்னை,


சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறநகர் ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அதில் குடிகார ஆசாமி ஒருவரும் ஏறியுள்ளார். அதிக போதையில் இருந்த அந்த நபர், பெண் பயணி ஒருவரிடம் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார்.

இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். ஒரு கட்டத்தில், பெண்ணை கட்டிப்பிடிக்க முயற்சித்து உள்ளார். இதனால், பெண்ணை சுற்றி நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, பாய்ந்து அந்த நபரை தடுத்து நிறுத்தினர்.

இதில் நிலைமை மோசமடையவே, அந்த பெண்ணை விட ரெயிலில் பயணித்த சில பயணிகளுக்கு ஆத்திரம் ஏற்பட்டு உள்ளது. இதனால், அவர்கள் ஒன்று சேர்ந்து குடிபோதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்தனர்.

இதன்பின்னர், அவரை அடுத்த ரெயில் நிறுத்தத்தில் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த நபர் வடஇந்திய நபர் என்றும் குடிபோதையில் சரியாக பேச முடியாமல் உளறி வருகிறார் என்றும் போலீசார் கூறினர்.

அந்த நபரை போலீசார் வீடியோ பிடிக்க முயன்றபோது, ஆபாச போஸ் கொடுத்து உள்ளார். இந்த சம்பவம் பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story