யானை தாக்கி இறந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு


யானை தாக்கி இறந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு
x

தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி இறந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மரகட்டா கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் என்கிற வெங்கடேசப்பா (வயது 55). விவசாயியான இவர் நேற்று முன்தினம் வனப்பகுதிக்கு சென்றபோது யானை தாக்கி இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், வெங்கடேசப்பாவின் பிணத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வெங்கடேசப்பாவின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். யானை ஊருக்குள் வராமல் தடுக்க சோலார் வேலி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து உயிரிழந்த வெங்கடேசப்பா குடும்பத்தினருக்கு ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். மேலும் அவர்கள் முதல்கட்டமாக இழப்பீடு தொகையாக ரூ.50 ஆயிரத்தை வெங்கடேசப்பாவின் குடும்பத்தினரிடம் வழங்கினர். அப்போது உதவி வனப்பாதுகாவலர் மாரியப்பன், தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story