பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி நாமக்கல்லில் நாளை நடக்கிறது


பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி நாமக்கல்லில் நாளை நடக்கிறது
x

பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி நாமக்கல்லில் நாளை நடக்கிறது.

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு என முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ந் தேதியினை தமிழ்நாடு நாளாக கொண்டாட தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதை முன்னிட்டு மாவட்ட அளவில் அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்புக்கு இணங்க, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இடையே கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. போட்டிகளில் முதன்மைக் கல்வி அலுவலரால் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் என்ற வகையில் பரிசுகள் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story