பள்ளி மாணவிகளுக்கான எறிபந்து போட்டி


பள்ளி மாணவிகளுக்கான எறிபந்து போட்டி
x
தினத்தந்தி 3 Aug 2023 1:15 AM IST (Updated: 3 Aug 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

வத்தலக்குண்டுவில் பள்ளி மாணவிகளுக்கான எறிபந்து போட்டி நடந்தது.

திண்டுக்கல்

நிலக்கோட்டை தாலுகா அளவில் பள்ளி மாணவிகளுக்கான குறுவட்ட எறிபந்து போட்டி வத்தலக்குண்டு மவுண்ட் சியோன் இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்தது. இதன் ெ்தாடக்க விழாவுக்கு பள்ளி தாளாளர் நோரிஸ் நடராஜன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் லின்னி நோரிஸ் போட்டியை தொடங்கி வைத்தார். போட்டியில் நிலக்கோட்டை தாலுகாவை சேர்ந்த 14 பள்ளி அணிகள் கலந்து கொண்டு விளையாடின. முடிவில் 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் அம்மையநாயக்கனூர் காவியன் பள்ளி முதலிடமும், நிலக்கோட்டை ஹச்.என்.யு.பி.ஆர். பள்ளி 2-வது இடமும் பிடித்தது.

17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் அம்மையநாயக்கனூர் காவியன் பள்ளி முதலிடமும், காமலாபுரம் திரவியம் பள்ளி 2-வது இடமும் பிடித்தது. 17 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் வத்தலக்குண்டு ஹோலி கிராஸ் பள்ளி முதலிடமும், காமலாபுரம் திரவியம் பள்ளி 2-வது இடமும் பெற்றது. இதில் வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகின. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மவுண்ட் சியோன் இன்டர்நேஷனல் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


Next Story