8,268 பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


8,268 பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
x

13,331 ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு பதிலாக 8,268 பணியிடங்களுக்கு மட்டும் போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு போட்டித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

இதையடுத்து தொடக்கக் கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையில் காலியாக இருக்கும் 13,391 ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்வதற்கு சில நாட்களுக்கு முன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என்று 3 வகையான ஆசிரியர்களை நியமனம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 5,063 ஆசிரியர் பணியிடங்களை குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 13,331 ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு பதிலாக 8,268 பணியிடங்களுக்கு மட்டும் போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story