புகார் பெட்டி

புகார் பெட்டியில் மக்கள் தெரிவித்த கோரிக்கை விவரம் வருமாறு
வாய்க்கால் தூர்வாரப்படுமா?
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா திருவாஞ்சியம் கிராமத்தில் விவசாய நிலங்கள் ஏராளம் உள்ளன. இந்த கிராமம் அருகே பாய்கால் புத்தாறு வாய்க்கால் செல்கிறது இந்த வாய்க்காலில் செடி கொடிகள் வளர்ந்து புதர் போல் மண்டி காட்சியளிக்கிறது. விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள்னர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், திருவாஞ்சியம்.
ஆபத்தான பள்ளி கட்டிடம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் தென்குவளைவேலிகிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் மிகவும் மோசமான ஆபத்தான நிலையில் உள்ள து. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் மற்றும்பெற்றோர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். பள்ளி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது விடுமுறை என்பதால் மாணவ-மாணவிகளின் நலன் கருதி பள்ளி கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-க.ராஜேஷ், திருவாரூர்.
வேகத்தடை வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாறு ராஜீவ்புரத்தில் நான்கு சாலை சந்திப்பு உள்ளது. இதனால் எந்த நேரமும் இந்த பகுதியில் வாகன போக்குவரத்து இருக்கும். இந்தநிலையில் சாலையை கடப்பதற்கு மாணவ-மாணவிகள் மற்றும் முதியவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையில் தகுந்த இடத்தில் வேகத்தடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், பெறையாறு.