புகார் பெட்டி
புகார் பெட்டி
வழிகாட்டி பலகையை மறைத்த மரக்கிளை
மேட்டுப்பாளையம்-கோவை சாலையில் என்.ஜி.ஜி.ஓ. காலனி கேட் அருகே வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டும் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாலையோர மரக்கிளைகள் வழிகாட்டி பலகையை மறைத்து உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்து மரக்கிளைகளை அகற்றி வழிகாட்டி பலகை வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் இருக்க ஆவண செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.
செந்தில்குமார், என்.ஜி.ஜி.ஒ.காலனி.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான பாரதியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தின் பின்புறம் சிலர் குப்பைகளை தொட்டியில் போடாமல் ஆங்காங்கே வீசி செல்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இவற்றை அகற்றி அந்த பகுதியில் குப்பை கொட்டுபவர்கள் மீது நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆதித்யா. ஊட்டி.
வாகன ஓட்டிகள் அவதி
கணபதி அத்திப்பாளையம் பிரிவில் இருந்து கோபாலகிருஷ்ணா மில் செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டேனியல், அத்திப்பாளையம் பிரிவு.
தடையை மீறி குளியல்
பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை உள்ளது. இங்குள்ள தடுப்பணையில் புதைமணல், சுழல் உள்ளதால் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடையை மீறி பலர் தடுப்பணையில் குளித்து வருகின்றனர். இதனால் உயிரிழப்பு அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தடுப்பணையில் சட்டவிரோதமாக இறங்கி குளிப்பவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், பொள்ளாச்சி.
சுகாதார சீர்கேடு
கோவை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட கணபதி கணேஷ் லே அவுட் மெயின் ரோட்டில் குப்பைகள் மலைபோல குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் காற்றில் பறக்கும் குப்பைகளால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றி, அங்கு குப்பைகளை கொட்ட தடை விதிக்க நடவடிக்கை எடுப்பார்களா?
சுப்பிரமணியன், கணபதி.
விபத்து அபாயம்
குருநல்லிபாளையத்தில் இருந்து வடசித்தூர் செல்லும் ரோட்டில் நீண்ட நாட்களாக பட்டுப்போன மரம் உள்ளது. அந்த மரம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மிகவும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே விபத்து ஏற்படுவதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பட்டுப்போன மரத்தை அகற்ற வேண்டும்.
மாசிலாமணி, வடசித்தூர்.
குண்டும் குழியுமான சாலை
கோவைப்புதூர் சி.பி.எம் கல்லூரியில் இருந்து அறிவொளி நகர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. தினமும் ஏராளமான வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்கிறது. எனவே இந்த சாலையை உடனடியாக செப்பனிட உயர் அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.
குமார், கோவைப்புதூர்.
சிக்னல் கம்பங்களில் தொங்கும் ஒயர்கள்
கோவை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஏராளமான சிக்னல்கள் உள்ளன. இந்த சிக்னல்களில் கேமராக்கள் இருப்பதால் அங்கு கேபிள் ஒயர்கள் உள்ளன. ஆனால் அந்த கேபிள் ஒயர்களை சரியாக பராமரிக்காததால் அவை அனைத்தும் சாலையின் ஓரத்தில் தொங்கியபடி இருப்பதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அந்த ஒயர்களில் சிக்கி கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சிக்னல்களில் தொங்கும் கேபிள் ஒயர்களை அகற்ற வேண்டும்.
ரவிக்குமார், காந்திபுரம்.
தெரு விளக்குகள் எரியுமா?
கூடலூர் நகரில் முக்கிய இடங்களில் தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் பெண்கள் உள்பட பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் நகரை ஒட்டியுள்ள இடங்களில் வனவிலங்குகள் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு முன்பாக தெருவிளக்குகள் சரிவர எரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முஸ்தபா, கூடலூர்.