புகார்பெட்டி


புகார்பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிவகங்கை

தெருநாய்கள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்தி கடிக்கிறது. குறிப்பாக மின்சார வாரியப்பகுதியில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. வாகனஓட்டிகளை நாய்கள் துரத்துவதால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே ெதருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

நெல்சன், இளையான்குடி.

சுகாதார சீர்கேடு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி துணை மின்சார வாரியத்தின் பின்புறம் கழிவுகள் அதிகமாக கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பிடித்து செல்லும் நிலை உள்ளது. தேங்கிய கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜீ, சிவகங்கை.

பழுதாகும் குடிநீர் குழாய்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி பகுதியில் அடிக்கடி குடிநீர் குழாய் பழுதாகிறது. இதனால் இப்பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. மேலும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இப்பகுதியினர் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் குழாய் பழுதாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அலாவுதீன், மானாமதுரை.

வீணாகும் குடிநீர்

சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் நான்கு ரோடு சந்திப்பு 7ஏ மூக்கு பகுதியில் உள்ள காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி கொண்டிருக்கிறது. சாலையில் தேங்கிய தண்ணீரால் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் வீணாகும் தண்ணீரால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே குழாயை சரிசெய்து சாலையை சீரமைக்க அதிகாரிகள் வேண்டும்.

பொதுமக்கள், சிவகங்கை.

கொசுத்தொல்லை

சிவகங்கை மாவட்டம் பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. கொசுக்கடியால் இப்பகுதி பொதுமக்கள் தூக்கமின்றி பாதிக்கப்படுகின்றனர். மேலும், பல்வேறு மர்ம காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. மக்களின் நலன்கருதி இப்பதியில் கொசுமருந்து அடிப்பார்களா?

நசீமாபேகம், சிவகங்கை.



Next Story