தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

புகார் பெட்டி

ராமநாதபுரம்

கொள்ளளவை அதிகரிக்க வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் பெரிய கண்மாய் வழியாக சக்கரக்கோட்டை கண்மாய்க்கு வைகை நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கண்மாய் ஆனது தூர்வாரப்படாததால் நீரானது வீணாக கடலில் கலக்கிறது. இதனை தடுக்க தூர்வாராமல் உள்ள சக்கரக்கோட்டை கண்மாயை ஆழமாக தூர்வாரி அதன் கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்.

அஸ்மாபாக் அன்வர்தீன், சக்கரக்கோட்டை.

பொதுமக்கள் சிரமம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சிக்குட்பட்ட ஏ.கே.எஸ். தோப்பு முல்லைநகர் முனைக்காடு பகுதியில் உள்ள வீடுகளுக்கு குறைந்த அழுத்ததில் மின்சாரமானது வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் இரவில் தூங்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகிறாார்கள். எனவே அதிகாரிகள் இதனை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாகய வினோத், மண்டபம்.

முன்அறிவிப்பின்றி மின்நிறுத்தம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் மின்வாரியத்திற்கு உட்பட்ட பகுதியில் முன்அறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முபாரக், ஆர்.எஸ்.மங்கலம்.

நாய்கள் தொல்லை

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கல்கிணற்றுவலசை கிராமத்தில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றி வருகின்றன. இவை அப்பகுதியில் உள்ள கால்நடைகளை பிடித்து கடித்துவருகின்றன. இதனால் இப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

திரவியம், உச்சிப்புளி.

கழிவறை வசதி வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே தெற்குதோப்பு அங்கன்வாடி மையத்தில் கழிவறை இல்லை. இதனால் இங்கு படிக்க வரும் குழந்தைகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த மையத்தில் கழிவறை அமைக்க வேண்டும்.

ஸ்டாலின், தொண்டி.


Next Story